மலையகம்விளையாட்டு

மீண்டும் சாதித்தார் மலையக மைந்தன்.

பதுளை வின்சன்ட் டயஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 45 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளில் மலையகத்தின் மைந்தன் குமார் சண்முகேஷ்வரன் மீண்டும் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

ஆண்களுக்கான பத்தாயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் அவர் வெள்ளிப்பதக்கத்தை வென்று சாதித்துள்ளார்.

வெறும் மூன்று செக்கன்களில் சண்முகேஷ்வரன் தங்கப்பதக்கத்தை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.

45 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளில் மெய்வல்லுநர் போட்டிகள் முதல் நாளில் அதாவது நேற்று நடத்தப்பட்டன.

இதில் ஆண்களுக்கான பத்தாயிரம் மீற்றர் ஓட்டப்போட்டி காலை வேளையில் நடத்தப்படவிருந்த போதிலும் மழை குறுக்கிட்டது.

எனினும் மாலையில் போட்டி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி மாலை 5 முப்பது அளவில் ஆரம்பமான பத்தாயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் பல நட்சத்திர வீரர்கள் பங்கேற்றனர்.

போட்டியின் ஆரம்பம் முதலே
மலையகத்தின் மைந்தனான ஹட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் வேகமாக ஓடினார்.

எனினும் கடைசி தருணத்தில் அவர் பின்தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சண்முகேஷ்வரனுக்கு சவாலாக செயற்பட்ட  மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார இந்தப்போட்டியில் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

போட்டியை கடப்பதற்காக அவர்  31 நிமிடங்களையும் 25 செக்கன்கள் மற்றும்
59 மில்லி செக்கன்களை எடுத்துக் கொண்டார்.

இதேவேளை மலையக மைந்தனான குமார் சண்முகேஷ்வரன் அவரை விட . 03 செக்கன்கள் பின்தங்கிய நிலையில் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இதன்பிரகாரம் கடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் முதல்தடவையாகக் களமிறங்கி தங்கப் பதக்கத்தினை வென்ற சண்முகேஸ்வரனுக்கு இம்முறை அதை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனது.

எது எவ்வாறாக இருப்பினும் இந்த வெள்ளிப்பதக்கம் நம் மலையக மண்ணுக்கும் பெருமையாகும்.

அதேநேரம் இந்த சாதனை நிகழ்த்திய சண்முகேஸ்வரனுக்கு எமது மலையகம் இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Related Articles

Back to top button