சமூகம்
மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ள நீர்வெறுப்பு நோய்

நாட்டில் நீர்வெறுப்பு நோய் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்..
இது குறித்து தொடர்ந்தும் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீர்வெறுப்பு நோயை தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் கைவிடப்பட்மையே இதற்கான காரணம் .
இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பு பொதுசுகாதார பரிசோதகர்களிடம் இருந்து, கால்நடை வளர்ப்பு திணைக்களத்தினால் கையேற்கப்பட்டது.
எனினும் அந்த திணைக்களம் அதனை உரிய வகையில் முன்னெடுக்கவில்லை .வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் உள்ளிட்ட மிருகங்களின் ஊடாக இந்த நோய் பரவுகிறது என குறிப்பிட்டுள்ளார் .