செய்திகள்

மீண்டும் தலையெடுக்கிறது படைப்புழு

அநுராதபுரம் மாவட்டத்தின் பல மாவட்டங்களில் மீண்டும் சேனா தளும்புவா என்று கூறப்படும் படைப்புழுவின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

தேசிய விவசாய திணைக்களம் இதனை உறுதி செய்துள்ளது.

படைப்புழு தாக்கத்தை ஆரம்ப கட்டத்திலேயே ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வடமத்திய மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் அம்பாறை மாவட்டத்தில் பரவிய படைப்புழு, மூன்று மாதங்களுக்குள், அம்பாறை, மொனராகலை, குருநாகல், காலி,மாத்தறை போன்ற மாவட்டங்களுக்கும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download