செய்திகள்

மீண்டும் நாடு முடக்கப்படுமா ? இராணுவத்தளபதி கூறியுள்ள முக்கிய விடயம்.

(ராகவ்)


நாட்டினை 14 நாட்களுக்கு முடக்கவுள்ளதாக வெளியான செய்தியினை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.

இதுபோன்ற எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 14 நாட்களுக்கு நாடு முடக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான கருத்துக்களை கண்டு மக்கள் ஏமாற்றமடையக் கூடாது எனவும் இராணுவத் தளபதி இதன்போது பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com