செய்திகள்
மீண்டும் நியோமல் ரங்கஜீவ விளக்கமறியலில்
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று அந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.