செய்திகள்

மீண்டும் நேற்றிரவுடன் முடங்கியது இலங்கை.!

நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல், நாளை அதிகாலை 04 மணி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதற்கமைய 30 மணித்தியாலங்களுக்கு இந்த பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும். இந்த 30 மணிநேரத்தில் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்காக கட்டுப்பாடு அவ்வாறே அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் பொசன் பூரணையை முன்னிட்டே இந்த பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுகின்றது.

30 நாட்களுக்குப் பின்னர் பயணக்கட்டுப்பாடுகள் கடந்த 3 நாட்களும் முழுமையாக தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாளைய தினத்திற்கு பின்னர், பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லையென இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

This image has an empty alt attribute; its file name is shop-closed-sri-lanka-lg.jpg

Related Articles

Back to top button