செய்திகள்

மீண்டும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுமா.? இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் இனிவரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட மாட்டாது என சமூகவலைத்தளங்களில் பரவும் தகவல்களில் உண்மை இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் 19 தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே பயணக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த சிறிய நாடு மீண்டும் முடக்க நிலைக்கு உள்ளாவதை தவிர்க்க வேண்டுமாயின் தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் சுகாதார வழிகாட்டுதல்களையும் மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

எனவே எதிர்வரும் காலப்பகுதியில் தேவையேற்பட்டால் பயணக்கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related Articles

Back to top button