செய்திகள்

மீண்டும் பாராளுமன்றம் செல்லும் ரணில் : திகதி அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, தமது கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் உறுப்புரிமையின் ஊடாக பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் திகதி அவிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்ட பாராளுமன்றம் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ள நிலையில் அன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு அமைய ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் அவர் குறிப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com