உலகம்

மீனவர்களின் நாளைய போராட்டம் ரத்து: மீனவ அமைப்புகள் அறிவிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடலோர காவல் படை துப்பாக்கி சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து நாளை நடைபெறவுள்ள போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று மீன்பிடித்த மீனவர்களின் படகை இந்திய கடலோர காவல் படையின் ராணி அபாகா கப்பல் வழிமறித்துள்ளது. பின்னர், வீரர்கள் படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். கம்புகளாலும் இரும்பு கம்பிகளாலும் மீனவர்களை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மீனவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடலோர காவல் படையினர் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து மீனவர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள போராட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக மீனவ அமைப்புகள் கூறுகையில், கடலோர காவல் படையினர் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை நடக்கவிருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு சம்பவம் இனி நிகழாது என கடலோர காவல்படை உறுதியளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் 18-ம் தேதி முதல் மீன் பிடிக்க செல்வதாக அறிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளன.

நன்றி மாலை மலர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button