செய்திகள்

மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி இந்தியாவில் பேச வேண்டும் என கோரிக்கை.

இலங்கையில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஷபக்‌ஷ இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாண மீனவர் சங்கம் சார்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் , எல்லை தாண்டிய மீன்பிடி செயற்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கோட்டாபய ராஷபக்‌ஷ மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

இந்நிலையில் இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது இந்தியா அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வட மாகாண மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Back to top button