செய்திகள்

மீனவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல்

கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு இன்று முதல் இழப்பீடு வழங்கப்படுகிறது.

ஒன்பதாயிரத்து 883 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு , வத்தளை, ஜா-எல,கந்தானை உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மீனவ குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளது. அதற்கமைய நீர்கொழும்பில் ஆறாயிரத்து 42 குடும்பங்களுக்கும் வத்தளையில் 1409 குடும்பங்களுக்கும் கந்தானையில் 233 குடும்பங்களுக்கும் ஜா- எல பகுதியை சேர்ந்த 69 மீனவ குடும்பங்களுக்கும் ஐயாயிரம் ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

இழப்பீட்டுக்காக ஐம்பது மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் குறிப்பிட்டார். பிரதேச செயலாளர்களூடாகவும் மாவட்ட மீனவ அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் கப்பலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு இழப்பீட்டுத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button