சமூகம்

மீரியபெத்த மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கான 4ஆம் ஆண்டு நினைவு கூரல்

கொஸ்லந்த – மீரியபெத்தவில் இடம்பெற்ற மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கான 4ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று அனுஷ்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீரியபெத்த பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிக்கி, 34 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், பலர் பாதிக்கப்பட்டு அங்கிருந்த வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இதேவேளை, இன்று காலை முதல் குறித்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடி நினைவு தினத்தை முன்னெடுத்து வருகின்மை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button