முகக்கவசம் அணியாத குற்றச்சாட்டில் கைதானவர்கள் எத்தனை பேர் தெரியுமா ?

uthavum karangal

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாத குற்றச்சாட்டில் இதுவரை 390
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி
செயற்படுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு
வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சட்டத்தை மீறுவோர் தொடர்பில் Drone
கெமராக்களினூடாக கண்காணிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கடந்த 08 மாதங்களில் கொழும்பில் 4,920 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்