செய்திகள்

முகநூலில் அவதூறு பரப்பிய இருவரை கடத்தி ஆணி அடித்த மதகுரு மாயம்

முகநூலில் கிண்டல் செய்யும் வகையில் கருத்து வெளியிட்ட இருவர் கடத்தி கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவ்வாறு கருத்து வெளியிட்ட இருவரையும் வீட்டுக்கு அழைத்து, அவர்களை அம்பிட்டிய பகுதிக்கு அழைத்துச் சென்று, அவர்களின் கைகளை பலகையின் நடுவில் வைத்து, ஆணி அடித்துள்ள சம்பவம் நேற்று முன்தினம் (25) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கண்டி பலகொல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயது நபரும், கடுவெல போமிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயது நபரும் தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கமைய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான 30 வயதுடைய துஷ்மந்த அம்பிட்டிய பிரதேசத்தில் தேவாலயத்தை நடத்திச் செல்பவரென்றும், அவரது இரண்டு உதவியாளர்களும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button