முக்கிய அறிவிப்பு.!

மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அடுத்ததாக படத்தின் இசை வருகிற 5ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை கச்சேரியும் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பேஸ்புக்கில் நேரலையில் ஒளிபரப்பவும் படக்குழு முடிவு செய்துள்ளது.