காலநிலைசெய்திகள்மலையகம்

முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு ; பொது மக்களுக்கு எச்சரிக்கை.!

மலையகத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் நீர்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று காலை மேலும் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக கொத்மலை ஓயாவின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

இதனால் கொத்மலை ஓயாவின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Articles

Back to top button