மலையகம்
முடிவுக்கு வந்த தோட்ட தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம்
அக்கரபத்தனை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் டொரிங்டன் தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யக்கோரி தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த ஆர்ப்பாட்டம், இன்றுடன் (07.04.2018) முடிவுக்கு வந்துள்ளது.
குறித்த தோட்டத்தின் முகாமையாளர் தோட்டத்தொழிலாளர்கள் நலன் சார்ந்த எந்த சலுகைகளையும் செய்து கொடுக்காமலும், தேயிலை மலைகளை பராமரிக்காமலும் இருந்ததன் காரணமாக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே குறித்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றுருந்தது.
எனவே இது தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்க அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, நேற்று (06.04.2018) தலவாக்கலையில் வைத்து தோட்ட அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் பின் சில சாதகமான முடிவுக்கு பின் இன்று தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பியிருந்தார்கள்.