...
உலகம்

முதன்முறையாக வெளிநாட்டவர்கள் விமானம் மூலம் ஆப்கானிலிருந்து வெளியேறினர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து, அங்கிருந்து முதன்முறையாக வெளிநாட்டவர்கள் விமானம் மூலம் வெளியேறியுள்ளனர்.

வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற விமானம், கட்டார் தலைநகர் டோஹாவில் நேற்று(09) தரையிறங்கியதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, இரண்டாவது விமானம் இன்று பயணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் கட்டாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி ப்ளின்கென் (Antony Blinken), வெளியேற்றல் நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கோரியிருந்தார்.
இந்நிலையில், 113 பேர் குறித்த விமானத்தில் பயணித்ததாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

13 பிரித்தானிய பிரஜைகள் கட்டாரை வந்தடைந்ததாக தெரிவித்துள்ள பிரித்தானியா இராஜாங்க செயலாளர், இந்த விமான சேவையை ஏற்பாடு செய்தமைக்காக கட்டாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தமது பிரஜைகளும் அந்த விமானத்தில் பயணித்ததாக அறிக்கை ஒன்றின் மூலம் உறுப்படுத்தியுள்ள வெள்ளை மாளிகை, கட்டாருக்கு நன்றியும் தெரிவித்துள்ளது.

43 கனேடிய பிரஜைகளும், 13 நெதர்லாந்து பிரஜைகளும் குறித்த விமானத்தில் பயணித்ததாக அந்தந்த நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

Related Articles

Back to top button


Thubinail image
Screen