...
உலகம்

முதன் முறையாக விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் நால்வர்.

விண்வெளி வீரர்கள் அல்லாத நால்வர் முதல் முறை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களை ஏற்றிய ரொக்கெட் பிளோரிடாவில் இருந்து நேற்று புறப்பட்டது.

அமெரிக்காவின் ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் கோடீஸ்வரர் ஜாரிட் ஐசக் மேன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினரே இந்த விண்வெளி பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சென்ற விண்கலத்திற்கு இன்ஸ்பிரேஷன்-4 என்று பெயரிடப்பட்டுள்ளது.

புளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளித் தளத்திலிருந்து நேற்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் என். 9 என்ற ரொக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

ரொக்கெட் விண்ணில் பாய்ந்த 12 நிமிடங்களில் அதன் 2ஆவது அடுக்கு தனியாகப் பிரிந்து, வெற்றிகரமாக புவியின் நீள்வட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்தது.

பூமியிலிருந்து 575 கி.மீ உயரத்தில் இந்த விண்கலம் அடுத்த 3 நாட்களுக்குச் சுற்றி வரும். மணிக்கு 27,300 கிலோ மீற்றர் வேகத்தில் சீறிப்பாயும் இந்த விண்கலம், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்றிவரும்

3 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பின்னர் அட்லாண்டிக் கடலில் பால்கான் ரொக்கெட் வெற்றிகரமாகத் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen