செய்திகள்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கை புதுப்பிப்பு!

தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான திருத்தப்பட்ட புதிய சுற்றறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நேற்று (13) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தரம் ஒன்றிற்கு மாணவர்களை சேர்ப்பதற்காக இதற்கு முன்னர் வௌியிடப்பட்ட சுற்றறிக்கையை அமுல்படுத்தும் போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அதிபர்கள், சுற்றறிக்கை திருத்தக் குழு, அமைச்சின் விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டு முதல் குறித்த சுற்றறிக்கையானது அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button