அரசியல்செய்திகள்மலையகம்

முதலாளிமார் சம்மேளனத்தின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் அடிப்பணியாது பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி அதனூடாக ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும்..?

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்க தயார் என ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் அதனை எவ்வாறு வழங்குவது என்பது தற்போது எழுந்துள்ள பிரச்சினை என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பாக நேற்று (23) பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.

இதில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஜனாதிபதி ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்காத நிலைமை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் முதலாளிமார் சம்மேளனத்தின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் அடிப்பணியாது பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி அதனூடாக ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆகவே பெருந்தோட்ட தொழிலாளர்கள் விடயத்தில் அரசாங்கம் உள்ளிட்ட எவரும் இரட்டை வேடம் போட கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக கல்லூரிகளில் பயிலும் ஐய்யாயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட வேண்டியது அவசியம் எனவும்
பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

அருள் ஜேசு

Related Articles

Back to top button
image download