விளையாட்டு

முதல் போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது..?

அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி முடிவின்றி கைவிடப்பட்டுள்ளது.

சிட்னி மைதானத்தில் இந்தப்போட்டி நடைபெற்றது.

இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 12 தசம் நான்கு ஓவர்களில் 03
விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது.

மீண்டும் 45 நிமிடங்களில் பின்னர் போட்டி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஓவர்களின் எண்ணிக்கை 15 ஆக குறைக்கப்பட்டது.

மீண்டும் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் சார்பாக அணித்தலைவர் பாபர் அஸாம் 38 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றார்.

மொஹமட் ரிஸ்வான் 31 ஓட்டங்களை பெற்றார்.

பாகிஸ்தான் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்களை பெற்றது.

மிச்செல் ஸ்டார்க் , ஜொய் ரிச்சட்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

மீண்டும் மழை குறுக்கிட்ட நிலையில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி அவுஸ்திரேலியாவின் வெற்றி இலக்கு 15 ஓவர்களில் 119 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா சார்பாக அணித்தலைவர் ஏரோன் பின்ச் அதிரடியாக ஓட்டங்களை குவித்தார்.

மொஹமட் ரிஸ்வானின் ஒரே ஓவரில் அவர் 26
ஓட்டங்களை விளாசினார்.

இன்றைய போட்டியில் அவர் இரண்டு சிக்சர்களை அடித்த போது இருபதுக்கு 20
அரங்கில் விரைவாக 200 சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

பின்ச் 16 பந்துகளில் 37 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 02 ஓட்டங்களையும் பெற்றிருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டது.

இதன்போது அவுஸ்திரேலியாஅமூன்று தசம் ஓர் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 41 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை காரணமாக ஆட்டம் மீண்டும் தடைப்பட்டது.

மீண்டும் போட்டியை தொடர முடியாத நிலையில் ஆட்டத்தை முடிவின்றி கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

Related Articles

Back to top button