தொழில்நுட்பம்

முதல் selfie எடுத்து செல்பி எடுத்து அனுப்பிய இன்சைட் விண்கலம்…

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சார்பில், அனுப்பட்ட இன்சைட் விண்கலம் முதலில் selfie எடுத்து அனுப்பியது. மேலும், செவ்வாயில் நிலவும் தற்ப வெப்ப நிலைகளும் குறித்தும் அது ஆராய்ச்சி செய்த வருகின்றது இன்சைட்.

இது முதல் படம் என்பதால் இதை பார்த்து மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

உலக நாடுகளும் போட்டிக் போட்டுக் கொண்டு செவ்வாய் கிரகம் குறித்தும், உயிரினங்கள் வாழ முடியுமான அங்குள்ள சூழ்நிலைகள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகின்றன. செவ்வாய் கிரகத்துக்கு முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செயற்கைகோளை இஸ்ரோவும் செலுத்தி சாதனை படைத்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஆராய்ச்சியிலும் உத்து வேகத்துடன் இஸ்ரோ செயல்பட்டு வருகின்றது.

1976ம் ஆண்டு முதல் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகம் குறத்து ஆராய்ச்சி செய்து வருகின்றது. பல்வேறு விண்கலன்களையும் செவ்வாய்க்கு அனுப்பி ஆய்வு செய்து வருகின்றது. நாசா தற்போது 9வதாக செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு விண்கலமான இன்சைட் கடந்த நவம்பர் 27ம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்தது. இது செவ்வாய் கிரகத்தின் நிலத்தை ஆழமாக ஆய்வு செய்யும் நோக்கில் அனுப்பட்டது.

தற்போது 15 டிகிரி கோணம் வரை சாயக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தின் புழுதியும் மணலும் படர்ந்த ஹோலோ என்ற நிலப்பரப்பில் 4 டிகிரி சாய்வாக அமர்ந்து இருக்கின்றது என்று நாசா தெரிவித்து இருக்கின்றது.

இன்சைட்டில் உள்ள நில அதிர்வு மற்றும் வெப்பநிலையை அறியும் சென்சார்கள் சரியாக வேலை செய்யும் என நம்புவதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது இந்த ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளது.


செவ்வாயில் தரையிறங்கியவுடன் முதன் முதலில் தனது செல்பியை எடுத்து இன்சைட் அழகு பார்த்துக் கொண்டது. பிறகு, இதை நாசாவுக்கு அனுப்பியது. இதை பார்த்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி செல்பி அழகாக இருக்கின்றது என்று மகிழ்ச்சியடைந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button