முதியோர்களுக்கு கிடைக்கவேண்டிய உதவுத்தொகை மீண்டும் பிரதேச செயலகத்திற்கு- யார் காரணம்?
கடந்த ஏப்ரல் மாதம் முதியோர்களுக்கான 2000 ரூபா உதவுத்தொகை கொடுப்பனவில் 6 லட்சம் ருபாய் தபாலகங்ளிலிருந்து மீண்டும் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு திரும்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பகமுவ பிரதேச சபைக்குற்பட்ட 3000 பயனாளிகள் உரிய காலப்பகுதியில் உதவுத்தொகையை பெற்றுக்கொள்ளவில்லை என தெரியவருகின்றது.
வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் பயனாளிகளும், நடக்க முடியாத நிலையில் உள்ளவர்களுமே மேற்படி உதவுத்தொகையை பெற்றுகொள்ளவில்லை என தெரியவருகின்றது.
70 வயதை தான்டிய முதியோர்கள் உதவுத்தொகை கூப்பனை பெற்றுக்கொள்ள கிராம சேவகர் காரியாலயத்திற்கு ஏறி இறங்குதிலும்,பணத்தை பெற்றுக்கொள்ள தபாலகங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கிடப்பதாலும் சொல்லெனா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
நடமாட முடியாத நிலையிலுள்ள முதியோர்களின் கூப்பனையும்.வழங்கப்பட்டுள்ள கூப்பனுக்கான பணத்தினை தபாலகங்களில் பெற்றுகொள்ள இயலாத நிலையிலுள்ள முதியோர்களின் உறவினர் அல்லது பாதுகாவலரிடம் வழங்க அனுமதியளிக்க மறுக்கும் உத்தியோகஸ்தர்களின் செயற்படுகளே 6 லட்சம் ரூபாய் திரும்பிச்சென்றமைக்கான காரணமென பாதிக்கப்படோர் தெரிவிக்கின்றனர்.
கிராமபுறங்களுக்கு கிடைத்து வந்த முதியோர்களுக்கான இவ் கொடுப்பனவு நல்லாட்சியின் பின்னர் தோட்டபுற முதியாவர்களுக்கு கிடைக்கப்பெற்றது.சட்டங்களை கடைபிடிக்கவேண்டும் என்பதோடு சற்று மனிதாபிமனத்தையும் பார்பதுவும் அவசியமானது.
நோர்டன் ராம்