செய்திகள்

முதியோர் கொடுப்பனவை பெற்றுக் கொள்ளும் எதிர்பார்ப்புடன் ஒரு இலட்சத்து 37 ஆயிரம் பேர் காத்திருப்பு..?

முதியோர் கொடுப்பனவை பெற்றுக் கொள்ளும் எதிர்பார்ப்புடன் 70 வயதிற்கு மேற்பட்ட ஒரு இலட்சத்து 37 ஆயிரம் பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளதாக முதியோருக்கான தேசிய செயலகம் தெரிவிக்கின்றது.

நிதி ஒதுக்கீடுகள் இன்மையால், முதியோர்களுக்கான கொடுப்பனவை வழங்க முடியாதுள்ளதாக முதியோருக்கான தேசிய செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக கொடுப்பனவை செலுத்துவதற்குரிய நிதியை அரசிடம் கோரியுள்ளதாக செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

நான்கு இலட்சத்து 16 ஆயிரத்து 667 பேர், தற்போது முதியோர் கொடுப்பனவை பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது வழங்கப்படும் இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவை இரண்டாயிரத்து 500 ரூபாவாக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முதியோருக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.

இதற்கான பிரேரணை, சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button