செய்திகள்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தின விழா கொழும்பு ப்ரைட்டன் ஹோட்டலில்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தின விழா கொழும்பு ப்ரைட்டன் ஹோட்டலில் இன்று மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலைஞரின் திருவுருவப்படமும் திறந்து வைக்கப்படது. நிகழ்வை இலங்கை இந்திய தொடர்பாளர் மணவை அசோகன் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லசாமியின் மகன் திருகேதீஸ் செல்லசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்ததுடன், நிகழ்வானது மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணின் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ரவுக் ஹக்கீம், ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைச்சர் எஸ்.ஆனந்தகுமார் மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் உட்பட அரசியல் பிரமுகர்களும், கலைஞர்களும், ஊடகவியலாளர்களும் சமூக தன்னார்வலர்கள் என பலரும்; நிகழ்வில் கலந்துகொண்டனர். 

Related Articles

Back to top button