உலகம்

முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரிக்கு 19 வருடங்கள் சிறை.

இரகசிய தகவல்களை சீன உளவாளிகளுக்கு வழங்கிய முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரிக்கு 19 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1994 இல் இருந்து 2007 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏவில் பணிபுரிந்த Jerry Chun Shing Lee எனும் குறித்த அதிகாரி அமெரிக்க பாதுகாப்பு இரகசியங்களை சீன உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2010 இல் ஹொங்கொங்கில் குடியேறிய அவர், சி.ஐ.ஏ தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக சீனாவிடமிருந்து கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரி பேராசைக்காக நாட்டை காட்டிக்கொடுத்துள்ளதுடன், முன்னாள் சக ஊழியர்களை சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாக எப்.பி.ஐவின் உதவி பணிப்பாளர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
image download