செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது.இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் சமூக பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் அவல நிலையைக் கருத்தில் கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் அமெரிக்க தூதுவர் முன்வைத்த வேண்டுகோளுக்கு நன்றியும் தெரிவித்தார்.

இச்சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர், தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடியதாக கூறியுள்ளார்.

மேலும் அமைதியான போராட்டத்துக்கான உரிமை உட்பட ஜனநாயகத்தை நிலைநிறுத்துதல் மற்றும் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பேசியதாக தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஜி.எல் பீரிஸ், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன ஆகியோரையும் கடந்த தினங்களில் அமெரிக்கத் தூதுவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

Related Articles

Back to top button