முன்னாள் மத்திய மாகாணகல்வி அமைச்சரின் மறைவிற்கு ஜனாதிபதி அனுதாபம்… பூதவுடல் தீயில் சங்கமம்
இரண்டாம் இணைப்பு
முன்னாள் மத்திய மாகாணகல்வி அமைச்சர் சந்தனம் அருள்சாமியின் பூதவுடல் இன்று மாலை 5 மணியளவில்
தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்தவகையில் இ.தொ.காவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஆலோசகர் முத்து சிவலிங்கம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள்.





முதலாம் இணைப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் சிரேஷ்ட தொழிற்சங்கவாதியும், முன்னாள் மத்திய மாகாணகல்வி அமைச்சருமான சந்தனம் அருள்சாமியின் பூதவுடலுக்கு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. பி. ரட்நாயக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுகவீனமுற்ற நிலையில் உரியிரிழந்த முன்னாள் மத்திய மாகாணகல்வி அமைச்சர் அருள்சாமியின் உடல் ஹட்டன் மல்லியப்பு பகுதியிலுள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் மத்திய மாகாணகல்வி அமைச்சர் அருள்சாமியின் மறைவிற்கு ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுதாபசெய்தியுடன் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. பி. ரட்நாயக்க இன்று இவரது இல்லத்திற்கு சென்றுள்ளார்.
இதேவேளை, இவரது பூதவுடலுக்கு பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர்.

