செய்திகள்

முப்படைகளினால் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளில் இன்று முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

முப்படைகளினா ல் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளில் இன்று முதல்
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று காலை எட்டு முப்பது தொடக்கம் மாலை நான்கு முப்பது வரையான காலப்பகுதியில்
மேல் மாகாணத்தில் , முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் நாளாந்தம் முப்படைகளின்
தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு சென்று சைனோபார்ம் தடுப்பூசியைப் பெற
முடியும் என பாதுகாப்புப் படைகளின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர
சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தடுப்பூசியேற்றும் பிரதான நடவடிக்கை நாராஹேன்பிட்டி இராணுவ
வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக வேரஹெர ,பனாகொட இராணுவ வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி ஏற்றும்
செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு விமானப்படை வைத்தியசாலை மற்றும் ரத்மலானை, கட்டுநாயக்க, ஏக்கல
விமானப்படை முகாம்கள், வெலிசரை கடற்படை வைத்தியசாலையிலும் தடுப்பூசி ஏற்றும்
நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனைத்தவிர, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, அநுராதபுரம், காலி,
மாத்தறை மற்றும் தியதலாவை ஆகிய பகுதிகளில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்,
இன்று முதல் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் முகாம்களின்
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர
சில்வா கூறினார்.

மாத்தறை இராணுவ முகாம், காலி கோட்டை இராணுவ முகாம், அநுராதபுரம் விக்டர்
இராணுவ வைத்தியசாலை, தியத்தலாவை இராணுவ வைத்தியசாலை, கிளிநொச்சி,
முல்லைத்தீவு, யாழ் இராணுவ வைத்தியசாலைகளிலும் தடுப்பூசியேற்றப்படவுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம்
முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Back to top button