சமூகம்

முப்படைகளின் பிரதானியை கைது செய்ய உத்தரவு

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கின் சந்தேகநபரான முன்னாள் லெப்டினன்ட் கமான்டர் பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் பேரில் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தனவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 9ம் திகதி அல்லது அதற்கு முன்னர் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்கு முன்னர் 3 சந்தர்ப்பங்களில் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தனவிற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் , அவை உரிய முறையில் செயற்படுத்தப்படாமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் கடுமையான கண்டனத்தை தெரிவித்தள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com