முல்லேரியா வைத்தியசாலை பீசிஆர் பரிசோதனை கருவியின் செயற்பாட்டு நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல்…

uthavum karangal

முல்லேரியா வைத்தியசாலையில் உள்ள புதிய பீசிஆர் பரிசோதனை கருவியின் செயற்பாட்டு நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இயந்திரத்தை பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், அதன் தரத்திற்கமைய பீசிஆர் பரிசோதனைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.

இந்த இயந்திரம் செயற்படுத்தப்பட்டால், நாட்டில் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் பீசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 14 ஆயிரமாக அதிகரிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்