செய்திகள்

முல்லைத்தீவில் 97% வாக்குப் பதிவு..

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நேற்றும் இன்றும் நடைபெற்றன.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 97% வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி. ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 171 வாக்களிப்பு நிலையங்களில் 17,676 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவற்றில் 514 தபால் மூல வாக்குகள் தேர்தல் திணைக்களத்தில் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் , அதன் அடிப்படையில் 97% வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.

Related Articles

Back to top button
image download