செய்திகள்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய நேற்று பிற்பகல் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கள்ளப்பாடு வடக்கு பகுதியை சேர்ந்த 48 வயதான ஒருவரே கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன் இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button