...
செய்திகள்

முல்லைத்தீவு- செம்மலை – அருள்மிகு நீராவியடிப் பிள்ளையார் திருக்கோயில் 

செம்மலையில் கோயில் கொண்ட பிள்ளையாரே
எம் செம்மை நிறை வாழ்வுக்குத் துணையிரப்பா 
பழைமை மிகு உன் கோயில் உலகறிய வேண்டும் 
பார் முழுதும் உனது புகழ் பரவிடவும் வேண்டும் 
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீற்றிருக்கும் பிள்ளையாரே
முன் சென்று உயர்வடைய நீயே துணையிரப்பா
தவறாது நம்பழைமை உலகறிய வேண்டும் 
தரணியிலே தலை நிமிர்ந்து நாம் வாழ வேண்டும் 
நீராவியடிப் பிள்ளையாரென்று நாமம் கொண்ட பிள்ளையாரே
நீதி நிறை நல்வாழ்வு நிலைக்கத் துணையிரப்பா
எம்மக்கள் உரிமைகள் உறுதி பெற வேண்டும் 
ஒற்றுமையாய் உன்னடியில் நாம் வாழ வேண்டும் 
நாயாறு நீரேரி அருகு கொண்ட பிள்ளையாரே
நிம்மதியும் நிலைத்து நாம் மேன்மையுறத் துணையிரப்பா
பொல்லாதோர் கொடு செயல்கள் வேரறுக்க வேண்டும் 
புகழ்குன்றா பெருவாழ்வு நாம் வாழ வேண்டும் 
தமிழரசர் ஆட்சியிலே சீர்பெற்ற பிள்ளையாரே
பழம்பெருமை ஒளிர்ந்திடவே ஏற்றதுணையிரப்பா
சொந்த மண்ணில் நம்முரிமை உறுதிபட வேண்டும் 
அச்சமின்றி வாழும் நிலை உறுதிபட நாம் வாழ வேண்டும் 
நிம்மதிக்காயுன்னடியைப் பற்றுகின்றோம் பிள்ளையாரே
நிம்மதியாய், நிரந்தரமாய் வாழத் துணையிரப்பா
அவலமில்லா வாழ்வெமக்கு உரித்தாக வேண்டும் 
உன் ஆசியுடன் செம்மலையில் நாம் வாழ வேண்டும். 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Sent from my Huawei phone

Related Articles

Back to top button


Thubinail image
Screen