...
செய்திகள்

முல்லைத்தீவு- மாமூலை- அருள்மிகு மகாவிஷ்ணு திருக்கோயில்

 
மாமூலை திருவிடத்தில் கோயில் கொண்ட திருமாலே 
மயக்கமின்றி, தயக்கமின்றி எமைக் காக்க வாருமய்யா
பிறந்தவர்கள் இறப்பதுண்மை உறுதியதை நாமறிவோம்
அநியாயப் படுகொலைகள் தடுத்துக் காக்கவேண்டுமய்யா
காலத்திற்குக் காலம் நன்மை செய்ய அவதரிக்கும் திருமாலே
காலத்தால் நாம் செய்த தவறுகளைப் பொறுத்தருள வேண்டுமய்யா
ஏற்றமிகு எதிர்காலம் எமைவந்து அடைவதற்கு 
ஏற்றவையை வழங்கி எமக்கருள வேண்டுமய்யா 
அரக்க மனங் கொண்டோரை அடக்குகின்ற திருமாலே
அச்ச நிலையகற்றி அறங்காக்க வாருமய்யா 
துடிக்கும் மனத்தினராய் நாமடைந்த துயரங்களை
இனியும் தொடராது தடுத்திடவே வேண்டுமய்யா 
வேம்பும் வில்வமும் இணைந்துள்ள திருத்தலத்தில் கோயில் கொண்ட திருமாலே
எம்குலத்தோர் ஒற்றுமையாய் வாழ வழிசெய்ய வாருமய்யா 
குறையின்றி நாம் வாழ்ந்து குவலயத்தில் மேன்மையுற
உற்றதுணையிருந்து எமைக்காக்க வேண்டுமய்யா 
முல்லைத் தீவினிலே ஆட்சி செய்யும் ஐயனே திருமாலே
முன்னின்று நிம்மதியாய் நாம் வாழ வழியமைக்க வாருமய்யா 
பக்குவம் தான் அறிந்து படியளக்கும் பேரருளே
பாவம் பொடிபடவே பாராள விரைந்து வர வேண்டுமய்யா
கற்றறிந்த நன்மக்கள் சூழ அமர் திருமாலே
கவலையில்லா வாழ்வமைய உறுதி செய்ய வாருமய்யா 
சுழன்று வரும் கொடுமைகளை வேரோடு அழித்து விட்டு
சுபிட்சமிகு எதிர்காலம் எமக்கருள வேண்டுமய்யா. 
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen