ஆன்மீகம்

முல்லைத்தீவு- முறிகண்டி பிள்ளையார் திருக்கோயில்.

முறிகண்டி தனிலிருந்து அருள்வழங்கும் பெருமானே
வரும் துன்பம் போக்கிவிடும் வல்லமையை அருளிடய்யா
கொடுமை பல சூழ்ந்து கொல்லுதய்யா எம் மனதை
நிம்மதியைப் பெற்றிடவே இரங்கிவரம் தந்திடய்யா..

இதயம் போன்றிருக்கும் இடம் கொண்ட நாயகனே
எம்துயரம் தீர்த்திடவே விரைந்தோடி வந்திடய்யா
கானகத்தே தனித்திருந்து வழிகாட்டும் பெருமானே
திக்கின்றித் தவிக்கின்றோம் இனியும் ஏன் மௌனமய்யா..

ஆற்றாது அரற்றுவோர் வேதனையை உணர்த்திடய்யா
ஆழ்கடலில் தத்தளிக்கும் படகு போல் ஆனோம் நாம்
திசைகாட்டி வழி நடத்த நின்னருளை நாடிநிற்கும்
திக்கற்ற எங்களுக்கு உன்துணை தான் வேண்டுமய்யா..

போதுமையா வேதனைகள் பொறுத்திடவே முடியாது
ஏங்கித் தவிக்கின்றோம் எமக்குத்துணை வந்திடய்யா
உறவைச் சிதைத்திடாது, உற்றாரைப் பிரிந்திடாது
செல்வம் தொலைந்திடாது இருக்க வழி செய்திடய்யா..

உன்னடியே சரணடைந்தோம் நீயே துணையய்யா
ஓடிவந்து காத்திடுவாய் எங்கள் திருவிநாயகனே..

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button