செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு அனுமதி ..!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாளைய தினம் கொவிட்-19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் என முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. பயங்கரவாதத்தை தூண்டாத வகையில் நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும் என திருத்திய கட்டளையை வெளியிட்டு முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதேவேளை, இதற்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட நிலையில் குறித்த தடை உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி இன்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் மீது இன்றையதினம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டபோதே இந்த திருத்திய கட்டளையை வெளியிட்டு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com