செய்திகள்

முழங்காலில் இருக்க வைத்து துன்புறுத்திய படையினர் : தற்போது குறித்த படையினருக்கு என்ன நடந்தது.?

பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடியவர்களை, தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு வீதியில் முழங்காலில் இருக்க வைத்து இராணுவத்தினரால் தண்டனை வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் ஏறாவூர் பகுதியிலேயே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல்மாகாணத்திற்கு ஒரு சட்டம் கிழக்கிற்கு ஒரு சட்டமா என்ற கேள்வி சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது.

இந்நிலையில் குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பணியினர் உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என இன்று காலை இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவதளபதி சவேந்திரசில்வாவின் உத்தரவின் பேரிலேயே அவர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் விசாரணைகள் முடிவடைந்ததும் தவறிழைத்த படையினருக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button