அரசியல்செய்திகள்

முஸ்லிம் அமைச்சர்கள் இன்று பிரதமருடன் கலந்துரையாடல்..

அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சர்களை மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மீண்டும் அழைத்துள்ள நிலையில் நாங்கள் பதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக எந்த தீர்மானங்களும் இதுவரை எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்தார். 

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கம்பரலிய வேலைத் திட்டத்தில் 25 இலட்சம் ரூபாவிற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை துறக்கும் போது முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் சில கோரிக்கைகள் நிறைவற்றப்படாமல் இருப்பதனால் இவ் விடயங்கள் தொடர்பாக பிரதமரை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை மாலை அலரி மாலிகையில் சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் எல்லை பிரச்சினை, தோப்பூர் உள்ளுராட்சி சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து பேசப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Articles

Back to top button
image download