அரசியல்

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்தனர் .

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அமைச்சுப் பதவிகளை மீளப் பொறுப்பேற்பதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

இதன் பிரகாரமே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளனர். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று பிற்பகல் 2 மணி அளவில் ஏ.எச்.எம். பெளசியின் வீட்டில் ஒன்று கூடியுள்ளது.பிரதமரிடம் பேசவேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளன.

முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயங்கள், கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் விடுதலை கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்,வாழைச்சேனை பிரதேச சபை எல்லை விவகாரம்,தோப்பூர் உப பிரதேச செயலக தரமுயர்த்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இந்த கலந்துரையாடலில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button