மூக்குக் கண்ணாடி பயன்படுத்துவோருக்கு கொரோனா தொற்றும் அபாயம் குறைவு..

uthavum karangal

மூக்குக் கண்ணாடி பயன்படுத்துவோருக்கு கொரோனா தொற்றும் அபாயம் குறைவாகவுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூக்குக்கண்ணாடி பயன்படுத்தாதவர்களை விட, மூக்குக்கண்ணாடி பயன்படுத்துபவர்களுக்கு கொவிட் வைரஸ் தொற்றும் அபாயம் மூன்று மடங்கு குறைவாகவுள்ளது.

இந்த ஆய்வானது இந்திய ஆய்வாளர்கள் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்கு 304 பேர் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் தொடர்ச்சியாக மூக்கு கண்ணாடியை அணிந்திருப்பவர்கள் தமது முகத்தை குறைவாக தொடுவதனால் அவர்களுக்கு வைரஸ் தொற்றும் அபாயம் குறைவாகவுள்ளது என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

தொடர்புடைய செய்திகள்