செய்திகள்

மூடப்படும் பாடசாலைகள் தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

நாளை (20) முதல் மூடப்படும் கொழும்பு மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் இணையவழிக் கல்வியை தொடர்வதற்கு ஆதரவளிக்குமாறு ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து சிரமம் காரணமாக கொழும்பு கல்வி வலயம் மற்றும் ஏனைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் நாளை (20) முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படும் என கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது.

எவ்வாறாயினும், மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் உட்பட அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் முக்கிய நகரங்கள் அல்லாத நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button