காலநிலைசெய்திகள்

மூடுபனி மேகக்கூட்டங்கள் தொடர்பில் பரிசோதனை.

நாட்டின் பல பகுதிகளில் காணப்பட்ட மூடுபனி போன்ற மேகக்கூட்டங்கள், இந்தியாவில் நிலவும் வாயு மாசடைவினால் ஏற்பட்டதா என்பது தொடர்பில் பரிசோதிக்கப்படவுள்ளன.

கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய தினம் பனிமூட்டம் போன்ற வானிலை காணப்பட்டதாக வளிமண்டவலவியல் திணைக்களம்

இந்திய தலைநகர் புதுடில்லியில் அதிகரித்துள்ள வாயு மாசடைவின் தாக்கம் ஏனைய பகுதிகளுக்கும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் டில்லியில் ஏற்பட்டுள்ள வாயு மாசினால் இலங்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் உறுதியாக கூற முடியாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

Related Articles

Back to top button
image download