...
செய்திகள்

மூத்த தொழிற்சங்க வாதிக்கு பிரதமரினால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி வைப்பு.

தொழிற்சங்க துறையில் அளப்பரிய சேவை புரிந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த தொழிற்சங்க வாதியான ரெங்கசாமி பழனி முத்துவிற்கு உழைக்கும் மக்கள் மேம்பாட்டுக்காக நிறைவேற்றிய பணியைப் பாராட்டும் வகையில் வாழ்நாள் சாதனையாளர் விருது அண்மையில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் வழங்கி வைக்கப்பட்டது.

அதற்கமைய அவருக்கான பாராட்டு விழா நேற்றைய தினம் பதுளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிராந்திய காரியாலயத்தில் பதுளை மாநில இயக்குனர் ஸ்ரீதரன் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் T.V. சென்னன் அவர்களும் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் காரியாலய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.

இதன்போது T V. சென்னன் மற்றும் மாநில இயக்குனர் ஸ்ரீதர் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. T.V. சென்னன் அவர்களால் அடையாள சின்னம் ஒன்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் காரியாலய உத்தியோகத்தர்களும் அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button


Thubinail image
Screen