...
செய்திகள்

மூத்த வானொலி அறிவிப்பாளர் ஜோக்கிம் பெர்னாண்டோ காலமானார்.

மூத்த வானொலி அறிவிப்பாளரும் பிரபல செய்தி வாசிப்பாளரும் எழுத்தாளரும் நாடகக்கலைஞருமான ஜோக்கிம் பெர்ணான்டோ காலமானார்.

மிகச்சிறந்த வானொலிக் கலைஞராக, தேசிய வானொலியின் கல்விச்சேவை, மாதர் பகுதி, தேசியசேவை நாடகங்கள் என பல நிகழ்ச்சிகளில் தனது சேவைகளை வழங்கியிருந்தார்.

இலங்கை வானொலி மேடை நாடக நடிகரும் வானொலி அறிவிப்பாளருமான ஜோக்கிம் பெர்னாண்டோ, கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

இலங்கை வானொலியில் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவர். வர்த்தக சேவையில் நடிகராக தனது வானொலிப் பிரவேசத்தை 1959 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ற் கல்லூரியில் கற்றார்.

பல வானொலி நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார். முழுநேர அறிவிப்பாளராக வருவதற்கு முதல் இலங்கை வங்கியில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen