அரசியல்

மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு; அடுத்த பேச்சுவார்த்த மே மாதம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இரு கட்சிகளுக்கும் இடையிலான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை மே மாதம் 09ம் திகதி இடம்பெற உள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று காலை இரண்டு தரப்பினதும் பிரதிநிதிகளும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக தொடர்ந்தும் கலந்துரையாடி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com