செய்திகள்
மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.!

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (03) ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை க.பொ.த உயர் தர பரீட்சை முதல் கட்ட விடைத்தாள் திருத்தும் நிலையங்களாக உள்ள 37 பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த 6 விடயம் தொடர்பான சுற்று நிரூபம் சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை சூழல், நுளம்புகள் மற்றும் குப்பைகளின்றி இருப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.