மலையகம்

மூன்று கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

பதுளை – ஹாலிஎல பகுதியில் வைத்து வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மூன்று கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு ஹாலிஎல பகுதியில் உடுவர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைவர் என தெரியவந்துள்ளது.ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது வலம்புரி சங்கு கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இந்த வலம்புரி லயன் அறை ஒன்றில் உள்ள அரிசி பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்து.

பொதுவான நபர் ஒருவரை அனுப்பி வைத்து இந்த வலம்புரி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button