காலநிலைசெய்திகள்

மூன்று மாட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து நிலவி வருகின்ற நிலையில் 3 மாவட்டங்களுக்கு மண் சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

மண் மேடு இடிந்து விழுந்தமையால் பதுளை மாவட்டத்தில் சில வீதிகளில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் சில இடங்களில் மண் சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன் பல நீர்த் தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு 643 குடும்பங்களைச் சேர்ந்த 2255 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button